மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய சிங்கிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தூர்,
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொழிலாளர்கள் உஜ்ஜைனில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய சிங்கின் வாகனத்தை நிறுத்தி கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திக்விஜய சிங் உட்பட 9 பேர் தடியால் தொழிலாளர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட திக்விஜய சிங் மற்றும் முன்னாள் உஜ்ஜைன் எம்பி பிரேம்சந்த் குட்டு உள்ளிட்ட 9 பேர் மீது ஐபிசி 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய சிங் உள்ளிட்ட 6 பேருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து இந்தூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மேலும் திக்விஜய சிங், பிரேம்சந்த் குட்டு உள்ளிட்ட 6 பேருக்கும், தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் பிணையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து கூறிய திக்விஜய சிங், "இந்த வழக்கு பொய்யானது, மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இது 10 ஆண்டுகள் பழமையான வழக்கு, முதலில் எப்.ஐ.ஆரில் கூட எனது பெயர் இல்லை. ஆனால் அரசியல் அழுத்தத்தின் காரணமாக பின்னர் சேர்க்கப்பட்டது. நான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன்' என்று கூறினார்.
Related Tags :
Next Story