காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் உயிரிழப்பு


காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் உயிரிழப்பு
x
தினத்தந்தி 27 March 2022 1:15 AM IST (Updated: 27 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் பட்காம் மாவட்டம் ஷாட்பாக் பகுதியை சேர்ந்த இஷ்ஃபக் அகமது அங்குள்ள காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், இஷ்ஃபக் அகமது மற்றும் அவரது சகோதரர் இருவரும் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் அகமது மற்றும் அவரது சகோதரர் உமரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபபட்ட நிலையில் போலீஸ்காரர் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை சுற்றிவளைத்த போலீசார், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story