வங்கக்கடல் நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
வங்கக்கடல் நாடுகளின் உச்சி மாநாட்டில் 30-ந்தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.
பிம்ஸ்டெக் அமைப்பு
வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்டுள்ள இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன.
‘பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி’ (பிம்ஸ்டெக்) எனப்படும் இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இலங்கை உள்ளது.
இந்த அமைப்பின் 5-வது உச்சி மாநாடு வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அமைப்பின் தலைவராக செயல்படும் இலங்கை அரசு, இந்த மாநாட்டை நடத்துகிறது.
காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் 30-ந்தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
கொரோனா சவால்கள்
கொரோனா தொடர்பான சவால்கள் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் சர்வதேசள அமைப்பில் உள்ள நிச்சயமற்ற நிலைகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. மேலும் அமைப்பின் அடிப்படை நிறுவன கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளை நிறுவுதல் குறித்தும் இந்த நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்சங்கர் இலங்கை பயணம்
இந்த மாநாட்டை முன்னிட்டு பிம்ஸ்டெக் மூத்த அதிகாரிகளின் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதைத்தொடர்ந்து மேற்படி நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார்.
Related Tags :
Next Story