மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்


மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 March 2022 1:25 PM IST (Updated: 27 March 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

மீன்வளம் குறித்து இந்தியா - இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற 5-வது கூட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்திய  மீனவர்களை கையாளும் விதத்தில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில்  மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும்  இலங்கையை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபாபிமான முறையில் அணுக வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மீன்வளம் குறித்து இந்தியா - இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற 5-வது கூட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் மீன்வளத்துறை செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு கலந்து கொண்டது. இதில் இலங்கை தரப்பில் மீன்வளத்துறை மந்திரியின் செயலாளர் ரத்தன்நாயக பங்கேற்றார். 

இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டன. அப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 


Next Story