தானேயில் 12 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 March 2022 3:20 PM IST (Updated: 27 March 2022 3:20 PM IST)
t-max-icont-min-icon

தானேயில் சிறுவன் ஒருவன் 12 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான்.


தானே,

மராட்டிய மாநிலம் தானே நகரின் முல்லா பாக் பகுதியில் உள்ள உயரமான மாடியில் 15 வயது சிறுவன் தனது வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்தான்.

இதனால் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்தானா, அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story