சுவிஸ் ஓபன் வெற்றி; சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் வெற்றி பெற்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story