"வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்" - இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு


வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் - இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு
x
தினத்தந்தி 27 March 2022 11:03 PM IST (Updated: 27 March 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

உலக்கோப்பை அரைஇறுதி போட்டியில் இறுதி வரை போராடிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஆட்டத்தில் கடைசி பந்து வரை பரபரப்பு நிலவியது. 

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இரு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நேர்த்தியாக இரு பந்துகளிலும் நேர்த்தியாக தலா ஒரு ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனால் வெற்றிக்காக கடைசி வரை போராடிய இந்திய அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதன் மூலம் உலகக்கோப்பையில் அரை இறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

இந்த நிலையில் இறுதி வரை போராடிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இறுதிவரை போராடிய மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணியை நான் பாராட்டுகிறேன். அவர்களது 2022 உலக கோப்பை பயணம், அணி ஒருபோதும் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ளாது என்பதை காட்டியுள்ளது. வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Next Story