பாடகி சுலோச்சனா சாவனுக்கு பத்ம ஸ்ரீ விருது - ஜனாதிபதி வழங்கினார்...!


பாடகி சுலோச்சனா சாவனுக்கு பத்ம ஸ்ரீ விருது - ஜனாதிபதி வழங்கினார்...!
x
தினத்தந்தி 28 March 2022 6:50 PM IST (Updated: 28 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

பாடகி சுலோச்சனா சாவனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.

புதுடெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 

பொது சேவை, வீரதீர செயல்கள், திரைத்துறை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து எஞ்சிய 74 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. ராஷ்டிரபதி பவனில் இந்த விழா நடைபெற்று வருகிறது.

இதில், மராத்திய பாடகி சுலோச்சனா சாவனுக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 89 வயதான சுலோச்சனா சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார். 

Next Story