ரூ.259க்கு ஒரு மாத வேலிடிட்டி; ஜியோவின் புதிய பிரீபெய்டு திட்டம் அறிமுகம்


ரூ.259க்கு ஒரு மாத வேலிடிட்டி; ஜியோவின் புதிய பிரீபெய்டு திட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 28 March 2022 10:07 PM IST (Updated: 28 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

ரூ.259க்கு ஒரு மாத வேலிடிட்டியுடன் கூடிய ஜியோவின் புதிய பிரீபெய்டு திட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.



புதுடெல்லி,



ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய பிரீபெய்டு திட்டம் ஒன்றை வாடிக்கையாளர்கள் வசதிக்காக அறிமுகப்படுத்த உள்ளது.  ரூ.259 கட்டணம் செலுத்தினால் போதும்.  ஒரு மாதத்திற்கு வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த ரூ.259 ஜியோ பிரீபெய்டு திட்டம், நடைமுறையில் உள்ள ரூ.239 ஜியோ பிரீபெய்டு திட்டம் போன்றதே.  இதில் வித்தியாசம் என்னவெனில் ரூ.239 திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்.

ஆனால், ரூ.259 திட்டத்தில் வேலிடிட்டி ஒரு மாதத்திற்கு இருக்கும்.  எடுத்துக்காட்டாக இந்த மாதம் 5ந்தேதி ரூ.259க்கு ரீசார்ஜ் செய்தீர்கள் என்றால், அடுத்து ஏப்ரல் 5ந்தேதி அன்று ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  மற்ற பலன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.

ரூ.259 திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படும்.  இந்த டேட்டா தீர்ந்து விட்டால் 64கே.பி.பி.எஸ். வேகத்தில் டேட்டா கிடைக்கும்.  அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். ஆகியவையும் கிடைக்க பெறும்.


Next Story