பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு!


பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு!
x
தினத்தந்தி 29 March 2022 9:57 AM IST (Updated: 29 March 2022 9:57 AM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் தொடங்கியது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அம்பேத்கர் பவன் வந்தடைந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் தோல்வியடைந்த இடங்கள் பற்றியும் அதற்கான காரணங்கள் குறித்தும் இன்று நடைபெற்று வரும் பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story