விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் போலீஸ் நிலையம் முன் தர்ணா போராட்டம்
விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் போலீஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லக்னோ,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் போராடின. அவற்றில் குறிப்பாக பாரதிய கிசான் அமைப்பு இந்த போராட்டத்தில் முக்கியமான விவசாய சங்கமாக இருந்தது. இந்த விவசாய சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகேஷ் டிகாயிட்.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் விவசாய சங்கத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து விவசாய சங்கத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கொட்வாலி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பாரதிய கிசான் அமைப்பு விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் கொட்வாலி போலீஸ் நிலையம் முன் அமர்ந்து இன்று தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த போலீஸ் நிலையம் முன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story