வியப்பூட்டும் திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைப்பது இல்லை- ஆனந்த் மஹிந்திரா வேதனை


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 29 March 2022 4:53 PM IST (Updated: 29 March 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

நம் நாட்டில் வியப்பூட்டும் திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது என ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.

புதுடெல்லி

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். அடிக்கடி தகவல் தரும் பதிவுகள், வீடியோக்கள் அல்லது சிறந்த  படங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், உண்மையான பிரச்சினைகளில் உள்ளலவர்களுக்கு உதவக்கூடியவர்.

வளைந்த சாலையில் செல்லும் போது துணிகளின் குவியலை தனது கைகளால் சிரமமின்றி தலையில் வைத்த்துக்கொண்டு  பிடிக்காமல் சைக்கிள் ஓட்டும் மனிதனின் திறமையை  அவர் பாராட்டினார்.

ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு உள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

இந்த மனிதன் ஒரு மனித செக்வே, அவனது உடலில் ஒரு கட்டமைக்கப்பட்ட கைரோஸ்கோப் உள்ளது! நம்பமுடியாத சமநிலை உணர்வு. இருந்தாலும் எனக்கு என்ன வலிக்கிறது

  திறமையான ஜிம்னாஸ்ட்கள்/விளையாட்டு வீரர்களாக இருக்கக்கூடிய அவரைப் போன்ற பலர் நம் நாட்டில் உள்ளனர், ஆனால் வெறுமனே கவனிக்கப்படவோ அல்லது பயிற்சி பெறவோ இல்லை என கூறி உள்ளார்.

இந்த வீடியோ டுவிட்டரில் வெளியானதில் இருந்து சுமார் 4 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவை முதலில் பகிர்ந்த பிரபுல்,எமோஜியுடன் நன்றி தெரிவித்தார்.



Next Story