போலீசாருக்கு ரூ.14¾ கோடி பாக்கி வைத்து உள்ள மும்பை கிரிக்கெட் சங்கம்..!


போலீசாருக்கு ரூ.14¾ கோடி பாக்கி வைத்து உள்ள மும்பை கிரிக்கெட் சங்கம்..!
x
தினத்தந்தி 29 March 2022 7:24 PM IST (Updated: 29 March 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதில் போலீசாருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ.14¾ கோடி பாக்கி வைத்து இருப்பது தெரியவந்து உள்ளது.

மும்பை

மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன் மைதானங்களில் சர்வதேச, ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் போது மைதானம், வீரர்கள் தங்கி உள்ள ஓட்டல்களுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் போலீசாருக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு கிரிக்கெட் சங்கம் அதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " மும்பையில் நடந்த பெண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு போட்டிகளுக்கு பாதுகாப்பு அளித்தற்கான கட்டணத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தவில்லை. அவர்கள் ரூ.14.82 கோடி பாக்கி வைத்து உள்ளனர். இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு பல முறை நினைவுப்படுத்தி விட்டோம்.

அதே நேரத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு வழங்க ரூ.4.20 கோடி கட்டணத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தி உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதில் கட்டண பாக்கி எதுவுமில்லை. " என்றார்.

Next Story