நாட்டில் 4 ஆண்டுகளில் 3,400 வகுப்புவாத கலவரங்கள் பதிவு
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 3,400 வகுப்புவாத கலவரங்கள் பதிவாகி உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் இன்று பேசும்போது, இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு முதல 2020ம் ஆண்டு வரையில் 3,400 வகுப்புவாத கலவரங்கள் பதிவாகி உள்ளன என தெரிவித்து உள்ளார்.
இதே காலகட்டத்தில் நாட்டில் 2.76 லட்சம் கலக சம்பவங்கள் நடந்துள்ளன. தேசிய குற்ற ஆவண அமைப்பின்படி, 2020ம் ஆண்டில் வகுப்புவாத அல்லது மதம் சார்ந்த வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2019ம் ஆண்டில் 438 ஆகவும், 2018ம் ஆண்டில் 512 ஆகவும், 2017ம் ஆண்டில் 723 ஆகவும், 2016ம் ஆண்டில் 869 ஆகவும் இருந்தது என தெரிவித்து உள்ளார்.
அவர் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், 2020ம் ஆண்டில் 51,606 வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இது, 2019ம் ஆண்டில் 45,985 ஆகவும், 2018ம் ஆண்டில் 57,828 ஆகவும், 2017ம் ஆண்டில் 58,880 ஆகவும், 2016ம் ஆண்டில் 61,974 ஆகவும் பதிவாகி உள்ளன என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story