கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு..!


Image via aicte-india.org
x
Image via aicte-india.org
தினத்தந்தி 30 March 2022 12:58 AM IST (Updated: 30 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டு முதல் (2022-23)பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது. இதனால் மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ‘ஆர்கிடெக்’ படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story