வரலாற்றில் முதல் முறையாக இந்திய ஜனாதிபதி துர்க்மெனிஸ்தான் பயணம்


வரலாற்றில் முதல் முறையாக இந்திய ஜனாதிபதி துர்க்மெனிஸ்தான் பயணம்
x
தினத்தந்தி 30 March 2022 3:00 PM IST (Updated: 30 March 2022 3:00 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் துர்க்மெனிஸ்தான் செல்ல உள்ளார். இந்திய ஜனாதிபதி துர்க்மெனிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி,

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு துர்க்மெனிஸ்தான். இந்நாட்டில் புதிய அதிபராக சர்தார் பெர்டிமுக்மிடோவ் பொறுப்பேற்றுள்ளார். இவரது தந்தை குர்பெங்குலி பெர்டிமுகம்டூவொ துர்க்மெனிஸ்தானில் 2006 முதல் கடந்த 19-ம் தேதி வரை அதிபராக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்தலில் குர்பெங்குலியின் மகன் சர்தார் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் 1-ம் தேதி துர்மெனிஸ்தான் செல்ல உள்ளார். இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மெனிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த பயணத்தின் போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள குர்பெங்குலியை ராம்நாத்கோவிந்த் சந்திக்க உள்ளார். 4 நாட்கள் துர்மெனிஸ்தானில் பயணம் மேற்கொள்ளும் குடியரசு தலைவர் வரும் 4-ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

அதன்பின்னர், துர்மெனிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு 4-ம் தேதியே ஜனாதிபதி நெதர்லாந்து செல்கிறார். அங்கு 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது நெதர்லாந்து இளவரசர் அலெக்சாண்டர் இளவரசி மெக்சிமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்க உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

Next Story