சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் தீ- ராஜஸ்தான் முதல்வரிடம் பேசிய பிரதமர் மோடி
ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள தீ குறித்து முதல் மந்திரி அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே இன்று காட்டுத் தீ குறித்து ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்ததுடன் மத்திய அரசு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அசோக் கெலாட்டிடம் உறுதி அளித்துள்ளார்.
Related Tags :
Next Story