உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது - மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது - மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2022 3:05 AM IST (Updated: 31 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் மாநில இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் 12-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நேற்று நடைபெற்றது. பால்லியா மாவட்டத்தில் அந்த தேர்வு வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில வினாத்தாள் வௌியான விவகாரம் தொடர்பாக பள்ளிகளுக்கான மாவட்ட ஆய்வாளர் பிரிஜேஷ்குமார் மிஸ்ரா உள்பட 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பிரிஜேஷ்குமார் மிஸ்ரா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

Next Story