அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!!
அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று (31-ந் தேதி) டெல்லி வருகிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைன் நெருக்கடி, இந்தோ-பசிபிக் நிலைமை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், “அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனுடன் பயனுள்ள உரையாடலை முடித்தேன். இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Just completed a useful conversation with @SecBlinken.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 30, 2022
Reviewed the progress on our bilateral cooperation. Discussed developments pertaining to the Indo-Pacific, Ukraine and the global economy.
Related Tags :
Next Story