சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 4-ந் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் நேரடி விசாரணை
ஏப்ரல் 4-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் முழுவீச்சில் நேரடி விசாரணை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்று பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் அனைத்தும் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காணொலி விசாரணை நடைபெற்று வந்தது. மற்ற நாட்களில் நேரடி விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் முழுவீச்சில் நேரடி விசாரணை தொடங்கும் என்றும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வக்கீல்கள் கேட்டுக்கொண்டால் காணொலி விசாரணைக்கான இணைப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story