கர்நாடகா: துக்க நிகழ்வுக்கு சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு....!
கர்நாடகாவில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவனகெரே கெலகோடி பகுதியை சேர்ந்த ஹாளப்பா. இவர் தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் ஒரு ஆட்டோவில் சென்று உள்ளனர்.
இவர்கள் வந்த ஆட்டோ கத்ராகுளம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ முற்றிலும் நாசமானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த 9 பேரை மீட்டு சித்ரதுர்கா அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஹாலப்பா (70), ருத்ரப்பா (58), பசவராஜப்பா (45) ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 6 பேருக்கு சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story