வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் படிப்படியாக குறைப்பு - அமித்ஷா
வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகார) சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சட்டம் ஜம்மு-காஷ்மீரிலும் அமலில் உள்ளது.
இதன் மூலம் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை பாதுகாப்பு படையினர் ‘வாரண்ட்’ இன்றி கைது செய்யலாம். அனுமதியின்றி சோதனை செய்யலாம். துப்பாக்கிச்சூடு நடத்தலாம் போன்ற அதிகாரங்களை இச்சட்டம் பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிறது.
இதற்கிடையில், ஆண்டு டிசம்பர் மாதம் கடந்த 4-ந்தேதி நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து சுரங்க தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுக்க தொடங்கினர்.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். உள்துறை மந்திரியின் இந்த அறிவிப்பிற்கு வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story