ராஜ்யசபை எம்.பி.க்களின் வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி
ராஜ்யசபை உறுப்பினர்கள் 72 பேரின் வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 72 பேர் இந்த ஆண்டின் மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதனை முன்னிட்டு அவர்களை வழியனுப்பி வைக்கும் விழா இன்று நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு 72 எம்.பி.க்களும் பிரதமர் மோடி, ராஜ்யசபை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டு குழு புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் அவையின் 23 பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசும்போது, உறுப்பினர்கள் ஓய்வு பெறும் நிலையில், மீதமுள்ள உறுப்பினர்கள் அவையை முன்னெடுத்து செல்வதில் அவர்களது பொறுப்பு அதிகரித்து உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளின் உணர்வுகள், வலிகள் ஆகியவற்றை மேலவை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, உறுப்பினர் அவைக்கு அதிகம் பங்காற்றி இருக்கிறார் என்பதும் உண்மை. உறுப்பினர்களுக்கு அவை ஏராளம் அள்ளி தந்திருக்கிறது என்பதும் உண்மை என்றும் பிரதமர் மோடி தனது பேச்சின்போது குறிப்பிட்டு உள்ளார்.
ஓய்வு பெற்று செல்லும் ராஜ்யசபை உறுப்பினர்களுக்கு வெங்கயா நாயுடு இன்று இரவு உணவு விருந்து அளிக்கிறார். இதில், 72 எம்.பி.க்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில், அவையில் உள்ள 6 உறுப்பினர்களின் இசை கச்சேரி, பாட்டு படித்தல் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
Related Tags :
Next Story