சி.ஆர்.பி.எப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 March 2022 5:32 PM GMT (Updated: 2022-03-31T23:02:43+05:30)

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் சி.ஆர்.பி.எப். பதுங்கு குழியின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பர்தா அணிந்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்கு குழி மீது பர்தா அணிந்த பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசினார்.  இது குறித்த சிசிடிவி காட்சியும் வெளியானது. 

அந்த சிசிடிவி காட்சியில், மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள் . பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த வழியாக செல்கிறார். அந்தப் பெண் கையில் ஒரு பையை வைத்து இருக்கிறார். அதை அவர் பதுங்கு குழிக்குள் திடீரென வீசிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார். பதுங்குக் குழி தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டதையும், பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிப்பதையும் காணமுடிகிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சி.ஆர்.பி.எப். பதுங்கு குழியின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பர்தா அணிந்த பெண்ணை சோபூர் போலீசார் இன்று கைது செய்தனர்.  அவர் மீது யுஏபிஏவின் கீழ் மூன்று எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று காஷ்மீர் ஐஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

Next Story