மும்பையில் புதிதாக 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை - உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்


மும்பையில் புதிதாக 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை - உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 1 April 2022 4:32 AM IST (Updated: 1 April 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 2 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரெயில் சேவையை நாளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மும்பை,

மராட்டியத்தில் குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகளின் போக்குவரத்து வசதியாக கூடுதலாக 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகளை அரசு தொடங்குகிறது. மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

புதிய வழித்தடமான 2ஏ, தானுக்கர்வாடியில் இருந்து தகிசர் கிழக்கு வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் காந்திவிலி மேற்கு, பாகாடி எக்சர், போரிவிலி மேற்கு, எக்சர், மண்டபேஸ்வர், கண்டார்பாடா, ஆனந்த்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும்.

இதேபோல மெட்ரோ 7 வழித்தடமானது ஆரேகாலனியில் இருந்து தகிசர் கிழக்கு வரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தின்தோஷி, குரார், அக்ருலி, பொய்சர், மாகாதானா, தேவிபாடா, ராஷ்ட்ரீய உதயான், ஒவ்ரிபாடா ஆகிய ரெயில்நிலையங்களில் மொட்ரோ நின்று செல்கிறது.

முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அவருடன் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Next Story