நாடு முழுவதும் 10 லட்சம் மின்வாகனங்கள் இயக்கம்; மத்திய மந்திரி தகவல்


நாடு முழுவதும் 10 லட்சம் மின்வாகனங்கள் இயக்கம்; மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 1 April 2022 11:48 AM IST (Updated: 1 April 2022 11:48 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 10 லட்சம் மின்சார வாகனங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.


புதுடெல்லி,


நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு மாற்று எரிபொருளை பயன்படுத்தும் நோக்கில் மின்சார வாகனங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முடிவை அரசு எடுத்துள்ளது.

அந்த வகையில், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.  இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த மார்ச் 25ந்தேதி வரையில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட (10,76,420) மின்சார வாகனங்கள் இயங்கி வருகின்றன.

அந்த மின்சார வாகனங்கள் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் கிடைக்க செய்யும் வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் 1,742 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

நாட்டில் மின் வாகன செயல்பாட்டை முடுக்கி விடும் வகையில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பு பற்றிய திருத்தப்பட்ட வழிமுறைகள் மற்றும் தரநிலைகளை கடந்த ஜனவரி 14ந்தேதி மத்திய ஆற்றல் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story