பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது; பிரதமர் மோடி
பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராக கூடிய மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் வகையில், தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் அச்சம் நீங்கும் வகையில் டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசி வருகிறார்.
அவர் கூறும்போது, தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகள், தேர்வின்போது அச்ச சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும். நண்பர்களை காப்பி அடிக்க தேவையில்லை. முழு நம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள்.
நீங்கள் அனைவரும் பண்டிகைகால மனநிலையுடன் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நேரிடையாக மையத்திற்கு சென்று தேர்வு எழுதும்போது எப்படி இருக்குமோ, அதுபோலவே ஆன்லைன் தேர்வும் இருக்கும்.
ஆங்கிலம் அல்லது மாநில மொழி என எந்த மீடியம் ஆக இருப்பினும், நமது மனம் பாடத்துடன் ஒன்றி இருக்கும்போது, பெரிய அளவில் வேறுபடாது என்பது பெருமூச்சு விட கூடிய ஒன்று.
நாம் ஆன்லைனில் படிக்கிறோமா? அல்லது சமூக ஊடகத்தில் படங்களை பார்த்து நேரம் செலவிடுகிறோமா? என மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, பெற்றோர்கள் தங்களுடைய கனவுகளை தங்களது குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story