மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியல்: முதலிடத்தில் மோடி; 23வது இடத்தில் மு.க.ஸ்டாலின்


மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியல்: முதலிடத்தில் மோடி; 23வது இடத்தில் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 April 2022 1:10 PM IST (Updated: 1 April 2022 1:29 PM IST)
t-max-icont-min-icon

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

புதுடெல்லி

இந்தியா முழுவதும் வெளிவரக் கூடிய பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 23-வது இடத்தில் இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரும் அளவில் தொடர் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அவர் இந்த இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் மோடியும், இரண்டாமிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மூன்றாம் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இடம்பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 13-வது இடத்தில் இருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா நாத் இந்தாண்டு 6-வது இடத்துக்கு முன்னேறி செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சாதனை புரிந்திருக்கிறார்.

முதலிடம் மோடி, இரண்டாமிடம் அமித்ஷா, மூன்றாம் இடம் மோகன் பகவத், 4-வது இடம் ஜே.பி.நட்டா, 5-வது இடம் முகேஷ் அம்பானி, 6-வது இடம் யோகி ஆதித்யநாத், 7-வது இடம் கவுதம் அதானி, 8-வது இடம் அஜித் தோவல், 9-வது இடம் அரவிந்த் கெஜ்ரிவால், 10-வது இடம் நிர்மலா சீதாராமன் ஆகியோ முதல் 10 செல்வாக்கு மிக்க நபர்களாக இந்தியாவில் திகழ்கின்றனர்.

மமதா பானர்ஜிக்கு 11-வது இடம்,  12 வது இடம் சுப்ப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா, 13-வது இடம் ராஜ் நாத் சிங்,14-வது இடம்  பி.எல்.சந்தோஷ் பாஜக தேசிய பொதுச் செயலாளர்,  15 வது இடம் மத்திய ம்ந்திரி ஜெய்சங்கர் .

உத்தவ் தாக்கரே 16-வது இடம், பினராயி விஜயன் 24-வது இடம், சோனியாகாந்தி 27-வது இடம், ஜெகன் மோகன் ரெட்டி 39-வது இடம், ராகுல்காந்தி 51-வது இடம், பிரியங்கா காந்தி 78-வது இடம், 94-வது இடம் கங்கனாரனாவத்.

Next Story