பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்காத சமூகம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது; பிரதமர் மோடி


பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்காத சமூகம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 April 2022 2:50 PM IST (Updated: 1 April 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு கல்வி வழங்க ஊக்கம் அளிக்காத சமூகம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புதுடெல்லி,



நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராக கூடிய மாணவ மாணவிகள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசினார்.

அவர் பேசும்போது, நமது கிராமங்களில் கல்வி நடைமுறையானது வளர்ச்சி கண்டுள்ளது.  பெண்களுக்கு கல்வி வழங்க ஊக்கம் அளிக்காத சமூகம் ஒருபோதும் வளர்ச்சி அடையாது என கூறினார்.

நாம் தியானத்தில் அடிக்கடி இணைந்திருக்க வேண்டும்.  நம்முடைய ஒவ்வொருவர் வாழ்விலும் அது அவசியம்.  நமக்கான வேலையில் நாம் கவனம் செலுத்துவதற்கு அது நமக்கு கற்று தருகிறது.

முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மாணவர்கள் சில நேரங்களில் சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள்.  வகுப்பில் நண்பர்களுடன் படித்தவற்றை திரும்ப படிக்கும் பழக்கத்தினை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.  இது அறிவை வளர்க்கவும் அவர்களுக்கு உதவும் என கூறியுள்ளார்.


Next Story