நேபாள பிரதமருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷோ பகதூா் தேவுபா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
புதுடெல்லி
3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷோ பகதூா் தேவுபா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஷோ பகதூா் தேவுபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, முதல் நாள் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் நேபாளம் - இந்தியா இடையேயான வணிகம், நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கும் நேபாள பிரதமா் செல்லவுள்ளாா்.
Related Tags :
Next Story