மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள்.. புதிய வரலாறு படைக்கும் பாஜக..!


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 1 April 2022 7:49 PM IST (Updated: 1 April 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெறுவதன் மூலம் இந்திய அரசியல் வரலாற்றில் பாஜக புதிய வாலாறு படைக்க உள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெறுவதன் மூலம் இந்திய அரசியல் வரலாற்றில் பாஜக புதிய வாலாறு படைக்க உள்ளது. 

6 மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களை உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாபில் பாஜக  தனக்கு இருந்த ஒரு இடத்தையும் இழந்தது. எனினும், அசாம், திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் ஒரு இடங்களை பாஜக வென்றது.  

தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று வெற்றி பெற்ற 3 உறுப்பினர்கள் எண்ணிக்கை இன்னும் மாநிலங்களவை இணையதள பக்கத்தில் அப்டேட் செய்யவில்லை. இருப்பினும், சமீபத்திய தேர்தலில் மேலும் மூன்று இடங்களை பாஜக கைப்பற்றிருப்பதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100ஆக உயர்ந்துள்ளது. 

1900- ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியாக ஒரு கட்சி மாநிலங்களவையில் 100 இடங்களை பெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம், இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை பாஜக படைக்க இருக்கிறது. 
இருந்த போதிலும், 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜக இன்னும் பெரும்பான்மையை பெறவில்லை.  கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 55ஆக இருந்தது.

பின்னர், நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பல  மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததன் மூலம் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருந்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 உறுப்பினர்கள் இருந்தனர். 

அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 2 பாஜக உறுப்பினர்களும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100-ஐ தொட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மாநிலங்களவை பலம் 100-ஐ தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், பாஜக இந்த எண்ணிக்கை விரைவில் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், 52 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா, சத்தீஷ்கர், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story