கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் புதுச்சேரி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 April 2022 8:20 PM IST (Updated: 1 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 

மேலும், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த இரு நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படாத நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், புதுச்சேரி கொரோனா இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.


Next Story