கவர்னர்கள் முடிவெடுக்க காலக்கெடு: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தனி உறுப்பினர் மசோதா தாக்கல்
மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதா மீது கவர்னர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க, திமுக எம்.பி. வில்சன் தனி உறுப்பினர் மசோதா தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்படுவதாகவும், ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால், அதனை பயன்படுத்தி கவர்னர்கள் காலதாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்துவதற்கும், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும், தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story