பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இ-மெயில் உண்மை தன்மை குறித்து விசாரணை
மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார்.
மும்பை,
மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த இ-மெயிலில் பிரதமர் மோடியை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துடன் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் குறித்து நேற்று மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறுகையில், " பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இ-மெயிலின் உண்மை தன்மை குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது " என்றார்.
பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த இ-மெயில் 2 மாதங்களுக்கு முன் வந்தது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story