“சண்டிகாரை பஞ்சாப்புக்கு உடனே மாற்ற வேண்டும்” - பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்


“சண்டிகாரை பஞ்சாப்புக்கு உடனே மாற்ற வேண்டும்” - பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 April 2022 4:07 AM IST (Updated: 2 April 2022 4:07 AM IST)
t-max-icont-min-icon

சண்டிகாரை பஞ்சாப்புக்கு உடனே மாற்ற வேண்டும் என பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சண்டிகார்,

முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், அந்த அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல்போக்கு உருவாகி உள்ளது. சண்டிகார், யூனியன் பிரதேச அந்தஸ்துடன் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகராக விளங்குகிறது.

இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள அரசு பணியாளர்களுக்கு மத்திய பணியாளர்கள் விதி பொருந்தும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதுவரை பஞ்சாப்பும், அரியானாவும் விகிதாசார அடிப்படையில் அதிகாரிகளை நியமித்து நிர்வகித்து வந்த நிலையை மாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு முக்கிய தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் கருப்பொருள், சண்டிகாரை உடனடியாக பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றியாக வேண்டும் என்று கூறுகிறது. இந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது.

Next Story