கடந்த நிதி ஆண்டில் ரூ.5,792 கோடி சொத்து வரி வசூல் - மும்பை மாநகராட்சி சாதனை
கடந்த நிதி ஆண்டில் மும்பை மாநகராட்சி ரூ.5 ஆயிரத்து 792 கோடி சொத்து வரி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சி 500 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த நிதி ஆண்டில் (2021-22) மும்பை மாநகராட்சி ரூ.5 ஆயிரத்து 792 கோடி சொத்து வரி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் (2020-21) ஒப்பிடுகையில் ரூ.701 கோடி அதிகம் ஆகும். முந்தைய நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு ரூ.5 ஆயிரத்து 91 கோடி சொத்து வரி வசூல் ஆகி இருந்தது. இதேபோல 2019-20 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 161 கோடி சொத்து வரி வசூலாகி இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக எப்-தெற்கு வார்டில் அதிக சொத்து வரி வசூலாகி உள்ளது. அந்த வார்டு பரேல், லால்பாக், சிவ்ரி, வடலா பகுதிகளை உள்ளிடக்கியது ஆகும். மாநகராட்சிக்கு அதிக வருவாய் அளித்து வந்த ஆக்ட்ராய் வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒழிக்கப்பட்டது. தற்போது மும்பை மாநகராட்சிக்கு சொத்துவரி மிகப்பெரிய வருவாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story