ரூ.21 ஆயிரம் கோடியை விரைந்து வழங்குங்கள் மத்திய நிதி மந்திரியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் மற்றும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.21 ஆயிரம் கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சாலை போக்கு வரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
நிதி மந்திரியுடன் சந்திப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
14-வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்க வேண்டும்.
2015-2020 காலகட்டத்திற்கு 14-வது நிதிக்குழு தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7 ஆயிரத்து 899 கோடியே 69 லட்சம் ரூபாயை பரிந்துரைத்தது.
ஆனால், மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 525 கிராமபஞ்சாயத்துகளில், 2 ஆயிரத்து 900 கிராம பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாததால், 548 கோடியே 76 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
செயல்பாட்டு மானியம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் 2 ஆயிரத்து 900 கிராம பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்று கொண்டனர். எனவே,அடிப்படை மானியத்தை வழங்க வேண்டும்.
இதேபோன்று 14-வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரத்து 524 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிந்துரை செய்தது.
2016-17-ம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494 கோடியே 90 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு விடுவித்தது.
கடும் நிதிச்சுமை
2017-18-ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தை பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை தமிழக அரசு நிறைவேற்றியபோதும் மானியம் விடுவிக்கப்படவில்லை.
அதேபோன்று 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான மானியத்தையும் விடுவிக்கவில்லை. எனவே, செயல்பாட்டு மானியம் 2 ஆயிரத்து 29 கோடியே 22 லட்சம் ரூபாயை விரைந்து வழங்க வேண்டும்.
கொரோனா பெருந்தொற்றினால் மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும் தமிழகம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது.
ரூ.20 ஆயிரத்து 860 கோடி
பெருந்தொற்றினால் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், தமிழக அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத்தொகை 13 ஆயிரத்து 504 கோடியே 74 லட்சம் ரூபாய் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 860 கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர, இந்த நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பெரும் இடைவெளி
சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய போது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தை கைவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளில்உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. பெருந்தொற்றுக்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின்பு, இந்த இடைவெளி அதிகரித்து கொண்டே வந்தது.
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை.
வருவாய் இழப்பு
இந்த நிலையில் 30.6.2022 அன்று சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.
இழப்பீடு வழங்கும் காலத்தை வருகிற ஜூன் மாதத்துக்கு பின்பு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story