முஸ்லீம் சமூகத்திற்காக மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தொடக்கம்!
இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சகத்தின் சார்பில் மும்பையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, அஞ்சுமன்-ஐ-இஸ்லாமின் ஐ.ஏ.எஸ் அகாடமியை திறந்து வைத்தார்.
இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம், மும்பையின் நியூ பன்வெல்லில் தொடங்கப்பட்டது. இது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தங்கி பயிற்சி பெற்று தயாராகும் வகையில் முஸ்லீம் சமூகத்திற்கான பயிற்சி மையமாக உள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:-
“மத்திய அரசு வேலைகளில் சிறுபான்மை சமூகத்தினரின் சதவீதம் 2014க்கு முன் 5 சதவீதத்துக்கும் குறைவாகvஏ இருந்தது. அது இப்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் வேலைகளில் சிறுபான்மை சமூகங்களின் சதவீதத்தை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரிக்க அரசின் கொள்கை உதவியுள்ளது.”
கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள் மூலம், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சுமார் 21.5 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. 2014க்கு முன்னர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 20,000 பேர் மட்டுமே இத்தகைய வாய்ப்புகளைப் பெற்றனர். அதற்கு மாறாக இப்போது நிலைமை உள்ளது.
முஸ்லீம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம், முன்பு 70 சதவீதமாக இருந்தது, தற்போது 30 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. அதை பூஜ்ஜியம் சதவீதமாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தேர்வாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர்களின் வெற்றிக் கதைகளால் இந்த திட்டம் ஊக்குவிக்கப்பட்டது.
அஞ்சுமன்-ஐ-இஸ்லாம் நிர்வாகத்தால் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய வக்ப் கமிஷன், மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.
மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் செயல்பட்டு வரும் ‘அஞ்சுமன்-ஐ-இஸ்லாமின் கல்சேகர் தொழில்நுட்ப வளாகத்தில்’ இந்த ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story