பயங்கரவாதிகள் எனக்கருதி மீன் பிடித்து வந்த இருவர் மீது தவறுதலாக ராணுவம் துப்பாக்கிச்சூடு


image credit:ndtv.com
x
image credit:ndtv.com
தினத்தந்தி 2 April 2022 8:02 PM IST (Updated: 2 April 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

அருனாச்சலப்பிரதேசத்தில் மீன் பிடித்துவிட்டு வந்த இருவரை ராணுவத்தினர் தவறுதலாக சுட்டனர்.

இட்டாநகர்,

அருணாச்சல பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் ராணுவத்தால் இரண்டு பொதுமக்கள் தவறுதலாக சுடப்பட்டனர். நேற்று மாலை அங்குள்ள சாசா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நோக்பியா வாங்டன் (28) மற்றும் ராம்வாங் வாங்சு (23) என அடையாளம் காணப்பட்ட இரு கிராமத்தினர் ஆற்றில் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ராணுவம், பயங்கரவாதிகள் எனக்கருதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதையடுத்து இரண்டு கிராமவாசிகளும் திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இராணுவத்தால் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ராணுவத்தினர் இருவரின் கை மற்றும் கால்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதால், இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவமானது ராணுவத்தால் தவறுதலாக நிகழ்ந்துவிட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story