மராட்டியத்தில் கிடைத்த 3 மீட்டர் வளையம், குண்டு; வானில் இருந்து விழுந்த மர்ம பொருளா?


மராட்டியத்தில் கிடைத்த 3 மீட்டர் வளையம், குண்டு; வானில் இருந்து விழுந்த மர்ம பொருளா?
x
தினத்தந்தி 3 April 2022 1:54 PM IST (Updated: 3 April 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் மற்றும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.





புனே,



மராட்டியத்தின் சந்திராபூர் நகரில் சிந்தேவாஹி கிராமத்தில் நேற்று இரவு 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் இருப்பது குறித்து தகவல் கிடைத்தது.

இதுபற்றி சிந்தேவாஹியின் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் கூறும்போது, அந்த வளையம் சூடாக இருந்துள்ளது.   வானத்திலிருந்து விழுந்தது போல் தோன்றியது என கூறியுள்ளார்.

இதேபோன்று இன்று காலை மற்றொரு கிராமத்தில் கோள வடிவிலான மற்றொரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் இருந்து விண்கற்கள் மழை பொழிந்தது போன்ற காட்சிகள் நேற்று வீடியோவுடன் வெளிவந்தது.  இந்த நிலையில் மர்ம பொருட்கள் கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.




Next Story