பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - மந்திரி ஷெகாவத்
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் எந்தவொரு யோசனையும் இந்தியாவால் வரவேற்கப்படுகிறது என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
புதுடெல்லி,
காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக
பாகிஸ்தான் ராணுவ முதன்மை தளபதி கமர் பஜ்வா தெரிவித்த கருத்துக்கு மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பதல் தரும் விதமாக பேசியுள்ளார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற இஸ்லாமாபாத் பாதுகாப்பு கருத்தரங்கத்தில், பாகிஸ்தான் தளபதி கமர் பஜ்வா பேசுகையில், “காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, ஆனால் அதற்கு இந்தியா ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைக்க வேண்டும்.
காஷ்மீர் பற்றி நிலுவையில் உள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், “காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
இது தவிர, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் எந்தவொரு யோசனையும் இந்தியாவால் வரவேற்கப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story