ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினம்!


ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினம்!
x
தினத்தந்தி 3 April 2022 10:36 PM IST (Updated: 3 April 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய ராணுவம், ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினத்தை இன்று (ஏப்ரல் 3) கொண்டாடியது. “சர்வே சந்து நிரமயா’’ என்பதை ராணுவ மருத்துவப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பொருள் “அனைவரையும் நோயிலிருந்தும், இயலாமையிலிருந்தும் விடுவிப்போம்’’ என்பதாகும். 

அமைதி காலத்திலும், போர் சமயங்களிலும், பாதுகாப்பு படையினர் முதல் சிவில் நிர்வாகம் வரை சேவை புரிவதில்  ‘ராணுவ மருத்துவ படை’ சிறந்து விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இடையறாமல், தன்னலமின்றி பாடுபட்டு, நாட்டுக்கு சிறப்பான தொண்டாற்றியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, ராணுவ மருத்துவப் படையின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ரஜத் தத்தா, ராணுவ மருத்துவ சேவை பிரிவின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் மற்றும் கடற்படை, விமானப்படை மருத்துவ சேவை தலைமை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கடமையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Next Story