ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி


ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 4 April 2022 10:18 PM IST (Updated: 4 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அமராவதி, 

ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களை அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனுடன் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்தர்களுக்காக கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களின் அலுவலகம் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

இதில் மாவட்டத்தின் முதல் கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பரமேஸ்வரன் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பகுதிகளை இணைத்து கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story