கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவன் தாயார் கொடுத்த வினோத தண்டனை


கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவன் தாயார் கொடுத்த வினோத தண்டனை
x
தினத்தந்தி 5 April 2022 1:23 PM IST (Updated: 5 April 2022 1:23 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவன் ஒருவருக்கு தாயார் வினோத தண்டனை கொடுத்துள்ளார்.

சூர்யாபேட்டை

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின்  15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து, போதைக்கு அடிமையானதற்காக அவனை தண்டிக்க கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார். கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கைகட்டுகளை அவிழ்த்துவிட்டார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story