பேருந்து கூரையின் மீது பயணம்; மின்சாரம் தாக்கி 3 பேர் பலி


பேருந்து கூரையின் மீது பயணம்; மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 April 2022 4:41 PM IST (Updated: 5 April 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் திருவிழாவுக்கு செல்ல பேருந்து கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.




ஜெய்சல்மர்,



ராஜஸ்தானில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  அதில் பயணிகள் அமர கூடிய இருக்கைகள் நிரம்பியதும் மீதம் இருந்த ஆட்களில் சிலர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டனர்.

பேருந்து புறப்பட்டு சென்றது.  இதில், ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதியருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் தாக்கி உள்ளது.  இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளித்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என டாக்டர் வி.கே. வர்மா கூறியுள்ளார்.


Next Story