“விவசாயிகள் மீது சுமை ஏற்றப்படாது” - உரங்களின் விலையேற்றம் குறித்து மத்திய மந்திரி பதில்


“விவசாயிகள் மீது சுமை ஏற்றப்படாது” - உரங்களின் விலையேற்றம் குறித்து மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 5 April 2022 9:36 PM IST (Updated: 5 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

உரங்களின் விலையேற்றம் என்ற சுமையை விவசாயிகள் மீது மத்திய அரசு சுமத்தாது என மத்திய இணை மந்திரி பக்வந்த் குபா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, உரங்களுக்கான மானியத்தைக் குறைத்து அதன் சுமையை விவசாயிகளின் மீது ஏற்றக்கூடாது என்று தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உரத்துறை இணை மந்திரி பக்வந்த் குபா, தேசிய உர உற்பத்தி திட்டத்தின் கீழ் எரிவாயு அடிப்படையிலான யூரியா உர உற்பத்தி துவங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் உரங்களின் விலையேற்றம் என்ற சுமையை விவசாயிகள் மீது மத்திய அரசு சுமத்தாது என்று அவர் கூறினார். 

Next Story