நிர்மலா சீதாராமனுடன் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்திப்பு


நிர்மலா சீதாராமனுடன் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்திப்பு
x
தினத்தந்தி 6 April 2022 11:54 PM IST (Updated: 6 April 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். முதல் நாளில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொண்டார். 

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜிஎஸ்டி பங்கு, நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

அதன் பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்ட அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு நிதித்துறையின் அனுமதி வழங்குமாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இதை தேசிய திட்டமாக அறிவிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. மின்சாரத்துறையில் 3 திட்டங்கள் பசுமை வழியில் சேர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இதை பரிசீலிப்பதாக மின்சாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story