டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 கோடி போதைப்பொருள் சிக்கியது


டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 கோடி போதைப்பொருள் சிக்கியது
x
தினத்தந்தி 7 April 2022 1:23 AM IST (Updated: 7 April 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 கோடி போதைப்பொருள் சிக்கியது.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ைலபீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் வந்து இறங்கினாா். அவா் லாகோஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக டோகா பயணம் செல்ல இருந்தார்.

அவரது உடமைகளை ெடல்லியில் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ெவள்ளை மற்றும் ெவளிர் வண்ணங்களில் ஏதோ மர்ம பவுடர் பொருள் இருந்தது. அதை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி ைவத்தனர். ேசாதனை முடிவில் அது கோகைன் ேபாைதப் ெபாருள் என்று தெரியவந்தது.

மொத்தம் 8 பாக்கெட்டுகளில் 5.9 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.89.74 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story