இஸ்ரோவின் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் நாட்டில் மேலும் பல ஆய்வு மையங்களை நிறுவ அரசு உத்தேசம்..!


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 7 April 2022 8:25 AM IST (Updated: 7 April 2022 8:25 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோவின் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் நாட்டில் மேலும் பல ஆய்வு மையங்களை நிறுவ அரசு உத்தேசித்துள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து பூமியைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்காக ( NASA- ISRO Synthetic Aperture Radar) நிசார் ( NISAR) என்ற செயற்கைக்கோள் பணியை மேற்கொண்டு வருவதாக மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் 2022-ல் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரோவின் விண்வெளி பயணங்கள் குறித்த விவரங்களை அவர் தெரிவித்தார்.

அதில் அவர், இஸ்ரோவின் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் நாட்டில் மேலும் பல ஆய்வு மையங்களை நிறுவ அரசு உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார். 

தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்ப இன்குபேஷன் மையம், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையம் ஆகியவை ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 200 லட்சம் மானியம் பெறும் என்றும், புதிய முன்மொழியப்பட்ட செல்களும் அதே வழிகாட்டுதல்களை பின்பற்றும் என்றும் கூறினார்.

மேலும் அவர், இந்திய விண்வெளித் திட்டத்தின் திறனை மேம்படுத்துதல், விண்வெளி அறிவியல் மற்றும் புவி கண்காணிப்பு தரவுத்தளத்தை விரிவுபடுத்துதல், கூட்டு சோதனைகள் மற்றும் தளங்களை உருவாக்குதல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது என்று கூறினார்.

Next Story