பாஜக எம்எல்ஏ மகன் மீது கொள்ளை வழக்குப்பதிவு
பாஜக எம்எல்ஏவின் மகன் மீது கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அயோத்யா,
பாஜக எம்எல்ஏவின் மகன் மீது கொள்ளை மற்றும் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
உத்தரபிரதேசத்தில் ,அயோத்யா , கந்தசா காவல் நிலையப் பகுதியில் உள்ள ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் பகதூர் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் பைசாபாத் கோட்வாலி நகர காவல் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
கடந்த திங்கள்கிழமை இரவு நான்கு பேர் ஒரு வாகனத்தில் இறங்கி வந்து தன்னைத் தாக்கியதாக பகதூர் சிங் அளித்த தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
வாகனத்தை ருடௌலி பாஜக எம்எல்ஏ ராம் சந்திர யாதவின் மகன் அலோக் யாதவ் ஓட்டி வந்ததாக அவர் அந்த புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் 1 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் அடங்கிய பையையும் பறித்துச் சென்றதாகவும், உதவி கேட்டு கூச்சலிட்டதால், பொதுமக்கள் அங்கு திரண்டதையடுத்து, தப்பியோடினர் என்றும் இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
சிங் அளித்த அந்த புகாரில் தனக்கு அல்லது அவரது குடும்பத்தினருடன் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு ருடௌலி எம்.எல்.ஏ ராம் சந்திர யாதவ்தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே கூறுகையில் ,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார் .
Related Tags :
Next Story